பயிர்காப்பீடு வழங்கக்கோரி தென்காசி மாவட்ட தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை தலமைச்செயலகத்தை நோக்கி பயணம் செய்ய முடிவு.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மை பாறை கிராமத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் ஓ ஏ நாராயணசாமி தலைமையில் கிராம மடத்தில் நடைபெற்றது
கூட்டத்தில் 2020/21இந்த ஆண்டில் அதிகமான மழை காரணமாக விவசாயிகள் விளைவித்த விலை பொருட்கள் எல்லாம் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் இந்த தொடர் மழையால் அழிந்து போய்விட்டது மேற்படி இந்தப் பயிர்கள் எல்லாம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தனர்
தற்போது இந்த திருவேங்கடம் பகுதிக்கு மட்டும் பயிர் காப்பீடு இல்லை என வேளாண்மை துறையினரும் புள்ளியியல் துறையினரும் தவறான கணக்கெடுத்து இன்சூரன்ஸ் துறைக்கு அனுப்பி விட்டனர் இதனால் இந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு இந்த நடப்பு நிதியாண்டுக்கு விதைப்புக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடி வருகிறார்கள் விவசாயிகளைப் பற்றி தமிழக அரசும் வேளாண் துறையும் கண்டுகொள்ளவே இல்லை பல முறை சென்னைக்கு மனுக்கள் அனுப்பியும் நேரடியாக மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை ஆகையால் இப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி பயணத்தை மேற்கொள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பா மகளிர் அணி தலைவர் சின்னத்தாய் கிருஷ்ணசாமி மற்றும் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
