திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாஇன்று காலை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நகரமே புதுப்பொலிவுடன் திகழ்கிறது .விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் திருவில்லிபுத்தூரில் குவிந்துள்ள னர். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவில்லி புத்தூரில் ஆண்டாள் அவதார தினமான ஆடிப் பூரத்தன்று ஆண்டா ளும் ரெங்கமன்னரும் இந்த திருக்கோவி லுக்கு வானமாமலை ஜீயர் சுவாமிகள் வழங் கிய பிரம்மாண்டமான தேரில் எழுந்தருள பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் அந்த திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்ப்பார் கள். விழாவில் தமிழக அமைச்சர்களும் உயர் நீதிமன்ற நீதிபதி களும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசு அறநிலைய துறை உயர் அதிகாரிகளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்ற னர்.
பக்தர்கள் வசதிக்காக மருத்துவம், குடிநீர், அன்னதானம், போக்குவரத்து வசதிகள் விரிவாக செய்யப் பட்டுள்ளன. .நான்கு ரத வீதிகளிலும் உய ரமான கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு விருது நகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது .