சென்னையில் ஏசி வெடித்து தூங்கி கொண்டிருந்தவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகன் ஷியாம் வீட்டில் உள்ள ஒரு அறையில் உறங்கிக் கொண்டிந்தார். அங்கிருந்த ஏ.சி.இயங்கியதால் அந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் அறையில் இருந்து புகை வெளிவந்ததை கண்ட தந்தை பிரபாகர், அதை உடைத்து பார்த்தபோது தீக் காயங்களுடன் மகன் ஷியாம் அலறியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக தண்ணீரை ஊற்றி காப்பாற்ற முயற்சித்துள்ளார். அதற்குள் ஷியாம் படுக்கையில் கருகி நிலையில் உயிரிழந்துள்ளார். அந்த அறையில் இயங்கிக் கொண்டிருந்த ஏ.சி.வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
