புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி இளம் பெண் வர்ணியா. இவரும் அண்டக்குளம் அருகே உள்ள சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்த காவல்துறையில் பணிபுரியும் அன்புராசு என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார் இன்று வரை இந்த பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டார்கள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இவர் அண்மைக்காலம் வரை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது திருச்சி ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அன்பு ராசு வர்ணியாவுக்குத் தெரியாமல் அவரது உறவுக்கார பெண்ணான தெம்மண்டான்பட்டி இந்த கிராமத்தைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கும் ஓர் ஆண் குழந்தை உள்ளது.
இது குறித்து நீண்ட நாள் கழித்து அறிந்த வர்ணியா கணவருடன் சண்டை போட்டு இருக்கிறார். இதனால் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். எனக்கு விவாகரத்து வேண்டும் என்று அன்புராசுவும் தனது கணவரை தன்னிடம் சேர்த்து வைக்கக் கோரி வர்ணியாவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். வழக்கு நிலுவையில் இருக்கும் போது தனது அனுமதியில்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் அன்பு ராசின் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடன் வாழ வைக்குமாறும் நாங்கள் இருவரும் பிரிந்து இருப்பதற்கு காரணம் அபிராமிதான் என்றும் இன்று பகலில் அபிராமியின் தந்தை வீடான தெம்மண்டான்பட்டி கிராமத்தில் வீட்டின் முன் தனது இரண்டு வயது குழந்தையுடன் சென்று சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயற்சி மேற்கொண்டார்.

இதை அறிந்த உடையாளிபட்டி காவல்துறையினர் அந்த ஊருக்கு செல்லும் வழியிலேயே பாரதிபுரம் என்ற கிராமத்தில் தடுத்து நிறுத்தி ஆலோசனைகள் சொல்லி திருப்பி அனுப்பி வைத்தனர். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வர்ணியா பேட்டியும் அளித்திருக்கிறார்.




