• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

“கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை..,

BySeenu

Jul 16, 2026

கோவையில் இன்று (16.07.2026) முதல் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கைவினைப் பொருட்களின் கிராப்ட் பஜார் 2026 கண்காட்சி மற்றும் விற்பனை இன்று முதல் கோவையில் தொடங்கி உள்ளது. கோவை, அவினாசி ரோடு, சுகுணா கல்யாண மண்டபத்தில் இக்கண்காட்சி ஜூலை 21 வரை 6 நாட்கள் நடைபெறும். இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் பாரம்பரிய கலைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி நேரடியாக விற்பனை செய்ய உள்ளனர்.

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு-ன் முக்கிய நிகழ்வாக நடைபெறும் இந்த கிராப்ட் பஜார், ஒரே இடத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திறன்மிக்க கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் கலைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்கிறது

திருவண்ணாமலை லம்பாடி எம்பிராய்டரி கலைஞர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தின் அரிய சிப்பிக் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், முழகுமூடு கான்வென்ட் எம்பிராய்டரி கலைஞர்கள் மற்றும் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கைத்தறி பருத்திச் சேலை நெசவாளர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், டெல்லியில் உள்ள தஸ்த்கர் கைவினைப் பொருட்கள் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஓராண்டு உழைப்பை முழுமையாக இழந்த கைவினைக் கலைஞர்களுக்கும் இந்த ஆண்டு கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சிறப்பு ஆதரவு வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் கிலிம் மற்றும் தரைவிரிப்பு தயாரிப்பாளர்கள், கர்நாடகத்தின் சந்தூர் குஷாலா கேந்திரா (லம்பாடி எம்பிராய்டரி), அசாமின் மூங்கில் மற்றும் பிரம்பு கைவினைப் பொருள் தயாரிப்பாளர்கள், காஷ்மீரின் கையால் வரையப்பட்ட உலோகப் பொருட்கள் மற்றும் பேப்பியர் மாஷே கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அவினாசி சாலை சுகுணா கல்யாண மண்டபத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது இதற்கு நுழைவு கட்டணம் இலவசம் ஆகும்.