• Thu. Dec 12th, 2024

நித்யாமேனனை திருமணம் செய்ய வற்புறுத்தும் வாலிபர்

தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி ஒரு வாலிபர் தொடர்ந்து 6 ஆண்டுகளாக வற்புறுத்துவதாக நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நித்யா மேனன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ‘19(1)(ஏ)’ என்ற மலையாளத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் இதனைத் தெரிவித்துள்ளார்அந்த நிகழ்வில் பத்திரிகையாளர் ஒருவர், “சந்தோஷ் வர்க்கி என்பவர் உங்களைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியில் பேசி வருகிறாரே.. அது குறித்து உங்களது பதில் என்ன.. என்று நித்யா மேனனிடம் கேள்வி எழுப்பினார்.அதற்குப் பதிலளித்த நடிகை நித்யா மேனன், அவர் சொல்வதை நம்பினால் நீங்கள் முட்டாள்தான். அவர் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக என்னையும் என் அப்பா, அம்மாவையும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வந்தார்.என் அம்மா புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில்கூட தொலைபேசி வாயிலாக அழைத்து பேசுவார். இதனால் “இனிமேல் அவர் அழைத்தால் அவரது எண்ணை பிளாக் செய்துவிடுங்கள்” என்று என் குடும்பத்தினரிடம் கூறினேன். இதன்படி அவரது 30க்கும் மேற்பட்ட எண்களை நாங்கள் பிளாக் செய்திருக்கிறோம்..” என்றார் நித்யா மேனன்.

நித்யா மேனனின் இந்தப் பேச்சு குறித்து சம்பந்தப்பட்ட நபரான சந்தோஷ் வர்க்கியிடம் பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டபோது, “நான் நித்யா மேனனிடம் 2009-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலும் பேசிப் பழகியிருக்கிறேன். 30-க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து நான் அவரை அழைத்ததாக சொல்கிறார். இந்திய சட்டப்படி ஒருவருக்கு 4 சிம் கார்டுகள் மட்டுமே கிடைக்கும் என்பது மக்களுக்கு தெரியும். என் தந்தை மறைவுக்கு பிறகு நான் உண்டு. என் வேலையுண்டு என இருக்கிறேன். இப்போது நித்யா மேனனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை…” என்கிறார்.