• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம்

ByA.Tamilselvan

Aug 8, 2022

தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சம்பத் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கண்ணன் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியன் உதவி கமண்டன்டாகவும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சுரேஷ் ராமநாதபுரம் பயிற்சி டி.எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சையில் பணிபுரிந்து காத்திருப்பு பட்டியலில் இருந்த டி.எஸ்.பி. கபிலன் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆனார். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர் நெல்லை ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.