



மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு திருமுருகன் திருக்கோவிலில் இன்று பங்குனி உத்திர நன்நாளை முன்னிட்டு முருகனின் திருக்கல்யாண வைபோகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் திருமண கோலத்தில் காட்சியளிக்க யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்கி திருமுருகனுக்கும் வள்ளி தெய்வானைக்கும் சிவாச்சாரியார்கள் திருமணம் செய்து வைத்தனர்.


இந்நிகழ்வில் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.
தொடர்ந்து திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு விருந்தளிக்கப்பட்டது.

