• Fri. Apr 18th, 2025

முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா..,

ByKalamegam Viswanathan

Apr 11, 2025

மதுரை பெருங்குடி பர்மா காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கள் விழா நடைபெற்றது.

விழாவிற்கு கோவில் கமிட்டி தலைவர் பிரதிப் ராஜா மற்றும் நிர்வாகிகள்
கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த 9ம் தேதி பால்குடம் அக்னி சட்டி ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் நேற்று முறைப்பாரி ஊர்வலமும் மற்றும் இன்று பூக்குழி இறங்கும் விழா மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. அன்னதான விழாவில் 2 ஆயிரதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் பிரதி ப்ராஜா செய்திருந்தார்.