• Fri. Apr 18th, 2025

ஸ்ரீ நீலமேக சாஸ்தா திருக்கோயில் கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Apr 11, 2025

மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம், பொதும்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நீலமேக சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடந்தது. முதல் நாள் மகா கணபதி ஹோமம், அதனைத் தொடர்ந்து, பரிகாவார பூஜைகள், மகாபூர்ணாவதி உட்பட நடந்தது இரண்டாம் கால பூஜை கள், மண்டபசாந்தி ,
கோபூஜை, மகாபூரணவதி நடந்தது.

அதனைத் தொடர்ந்து, அழகர் கோவில் ராமேஸ்வரம் உட்பட பல்வேறு புனித தலங்களில்இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்கள் புறப்பாடு ஆகி சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழுங்க, வானத்தில் கருடன் வட்டமிட அஷ்டப்பந்தன
மகா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடந்தது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, பொதும்பு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.