• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நம்பியூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

ஒற்றையானையால் நம்பியூர் பகுதியில் பரபரப்பு.பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல். கோபி -சத்தி மெயின் ரோடு மங்களபுரம் பிரிவில் இருந்து தெற்கே 1 – கி.மீ. தொலைவில் ஒடையாக்கவுண்டன் பாளையம் வெள்ளிமலை கரடு மனோகரன் என்பவரின் தோட்டத்தின் அருகே வெங்கிடு என்பவர் நடந்து போகும் போது சத்தம் கேட்டதாகவும் அப்பொழுது யானை ஒன்றை பார்தத்தாகவும் யானை அருகில் உள்ள வாழை மற்றும் கரும்பு காட்டிற்குள் சென்று விட்டதாகவும் யானை நடந்து சென்ற கால் தடங்கள் உள்ளதாக தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து விளாமுண்டி மற்றும் டி. என். பாளையம் வனச்சரக அலுவலர்கள் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.