• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்..,

ByP.Thangapandi

Feb 9, 2026

உசிலம்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர மன்ற பொறுப்பு தலைவர் தேன்மொழி துவக்கி வைத்தார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தமிழகத்தில் உள்ள நகராட்சி,பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தனியார் மண்டபத்தில் நகராட்சியில் உள்ள 132 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் உணவு வழங்கும் திட்டத்தினை உசிலம்பட்டி நகர் மன்றபெறுப்பு தலைவர் தேன்மொழி, நகராட்சி ஆணையாளர் இளவரசன்,திமுக நகரச் செயலாளர் தங்கப்பாண்டியன் இணைந்து துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து தூய்மை பணியாளுடன் இணைந்து உணவு அருந்தினர்., இதில் நகர மன்ற உறுப்பினர்கள் , நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.,