• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு..,

ByP.Thangapandi

Feb 9, 2026

கொத்தடிமை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை உறுதிமொழி எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் துவக்கி வைத்தார்

கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் பிப்ரவரி-9 இன்று தமிழகத்தில் கடைபிடிக்கப் படுகிறது.,

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் துவக்கி வைத்தார்.,

இதில் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்., இதில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கையெழுத்து இட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.,