மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் சோ.பரமசிவம் எழுதிய செல்ல மகன் புத்தகத்தை நகைச்சுவை மன்ற அமைப்புச் செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் வெளியிட குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் பெற்று கொண்டார். உடன் புத்தக ஆசிரியர் சோ.பரமசிவம், எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் அப்பா பாலாஜி, கவிஞர் கு.கி.கங்காதரன், சமூக ஆர்வலர் எஸ்.பாபு, நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குழந்தைகள் நகைச்சுவை கூறினார்கள். அனைவருக்கும் உணவு, பரிசுகள் வழங்கப்பட்டது.