

மதுரை நாகமலை புதுக்கோட்டை துவாரிமான் விளக்கு பகுதியில் இன்று காலை திண்டுக்கல்லில் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் 51 வயதான செல்லப்பாண்டி இவர் திண்டுக்கல்லில் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகில் உள்ள சோலை கொண்டான்பட்டி சென்று கொண்டிருந்தார்.
செல்வதற்காக நேற்று முன்தினம் காலை தனது டூவீலரில் திண்டுக்கல்லில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் பகுதியில் வந்தபோது., கீழ மாத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளி ஸ்ரீ அரபின்டோ மீரா பள்ளி வாகனம் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சாலையை கடக்க முற்பட்டு உள்ளது.
சாலையை கடப்பதற்காக ஏற்கனவே அப்பள்ளியின் பேருந்து நின்று கொண்டிருந்த போது., சொந்த ஊர் சென்று கொண்டிருந்த சிறப்பு சார்ப ஆய்வாளர் செல்லப்பாண்டி பள்ளி பேருந்தை கடக்க முற்பட்டபோது அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு பேருந்து (31) எண் கொண்ட வாகனம் வேகமாக சாலையை கடக்க சிறப்பு சார்பு ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சார்பு ஆய்வாளர் கால் துண்டானது.
ரத்த வெள்ளத்தில் இருந்த சார்பு ஆய்வாளரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 31 வது பேருந்து இயக்கி வந்த மதுரையை சேர்ந்த பிரசாத் என்பது தெரிய வந்தது. தற்போது இந்த விபத்தினுடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இது காவல்துறையினர் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனைவி, 2 மகன்கள் உள்ளனர். சமூக ஆர்வலரின் கோரிக்கையானது துவரிமான் விளக்கு பகுதியில் பள்ளிகள் பள்ளிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தனியார் குடியிருப்புகள் அதிகளவு இருப்பதால் அப்பகுதியில் முறையான சாலை பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அப்பதியில் பேரிகாடுகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
- சிறைவாசிகளுக்கு விடுதலைக்கு பின்னர் மிகப்பெரிய எதிர்காலங்கள் காத்திருக்கின்றனர் – பட்டிமன்றம் புகழ் ஞானசம்பந்தம் பேட்டி..,தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தி ஜெயந்தி விழா மதுரை மத்திய … Read more
- மதுரையில் புதிய வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்வு..!மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100வது ஆண்டு விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மதுரையில் … Read more
- திருமங்கலத்தில் மாணவர்கள் பல்வேறு இடங்களில் தூய்மைப்பணி விழிப்புணர்வு..!திருமங்கலத்தில் பல்வேறு இடங்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ் மாணவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர்திருமங்கலம் … Read more
- அக்.15ல் திருப்பரங்குன்றத்தில் நவராத்திரி தொடக்கம்..!திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வருகிற அக்டோபர் 15ஆம் தேதியன்று நவராத்திரி திருவிழா தொடங்க இருக்கிறது.மதுரை … Read more
- காதலனுடன் சென்றதை மறைக்க கடத்தல் நாடகம் ஆடிய கல்லூரி மாணவி..!காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றியதை மறைக்க கடத்தல் நாடகம் ஆடிய கல்லூரி மாணவிக்கு போலீசார் அறிவுரை … Read more
- தொடர் விடுமுறை எதிரொலி – கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை எதிரொலியால், கொடைக்கானலில் சுற்றுலா … Read more
- சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா அனுசரிப்பு..!காந்திஜெயந்தியை முன்னிட்டு, சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது.சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் … Read more
- காந்திஜெயந்தி – மகாத்மாகாந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை..!இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி … Read more
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் 60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த பெரியவரிடம், “நீங்க … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 262: தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,ஆடு மயிற் பீலியின் … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 539:இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. பொருள் (மு.வ): தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் … Read more
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் … Read more
- கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி … Read more
- ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள … Read more
