• Thu. Apr 24th, 2025

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, கழிப்பறையை கட்டிக் கொடுத்த தனியார் வங்கி மென்பொருள் நிறுவனம்..!

Byஜெ.துரை

Oct 24, 2023

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 23 லட்சம் மதிப்பில் கப்பல் வடிவிலான கழிப்பறையை கட்டிக் கொடுத்த தனியார் வங்கி மென்பொருள் நிறுவனம். திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டியில் அரசு மேல் நிலைப் பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இப் பள்ளியில் கழிவறை வசதி இல்லாமல் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், இனப்பெருக்க உறுப்பு நோய்த்தொற்றுகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை மாணவ மாணவிகள் சந்தித்து வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதை கருத்தில் கொண்டு டெமினாஸ் என்னும் தனியார் நிறுவனமானது இந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சுமார் 23 லட்ச ரூபாய் மதிப்புள்ள கப்பல் வடிவிலான கழிப்பறையும் அது மட்டுமின்றி மாற்றுத்திறனாளி பயன்படும் வகையிலும்
நாப்கின், டிஸ்பென்சர்கள் மற்றும் எரிப்பான்கள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளுடன் எட்டு கழிப்பறைகள் வடிவைமக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவிற்கு டெமினோஸ் மண்டல தலைவர் கணேசன் ஸ்ரீராமன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். இவ்விழாவில் கொரட்டி அரசு மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் தேவசகாயம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.