• Sat. Apr 20th, 2024

நீலகிரி பகுதியில் பிக்கப் வாகனத்தில் தொடரும் ஆபத்தான பயணம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் ஆபத்தான நிலையில் பிக்கப் வாகனத்தில் வேலைக்காக ஆட்களை ஏற்றிச் செல்லப்படுகின்றனர் .கட்டுமான பொருட்கள் காய்கறி மூட்டைகள்,.பொருட்களை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் பிக்கப் வாகனத்தில் ஆபத்தான முறையில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் 20க்கும் மேற்பட்ட ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர். இதை கண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அபாயகரமாக செல்லும் பிக்கப் வாகனம் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,கோட்டாட்சியர் வாகனத்தின் உரிமை மற்றும் ஓட்டுநரின் உரிமையை ரத்து செய்து ஓட்டுனர் மீது வழக்கு பதிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் .


கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அன்று மஞ்சூரில் இருந்து ஆட்களை ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் கேரப்பாடு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் 500 அடி பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயங்களோடு மஞ்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒரு ஆண்டுகள் முடிந்த நிலையிலும் விபத்து ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் வீட்டில் படுக்கையில் அமர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *