மதுரை ஆவின் தலைமை அலுவலகம் முன்பாக மதுரை ஆவின் ஊழியர்கள் சங்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரந்தs பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
பால் கொள்முதல் தற்போது நடைமுறையில் உள்ள பி.எம்.சி என்ற ஒப்பந்த அடிப்படையை கைவிட்டு கொழுப்பு சத்துகேற்ப்ப விலை நிர்ணயம் செய்து ஆவின் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
அலுவலகப் பணியில் உள்ள அலுவலர்கள்களை சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் மேலும் பால் விநியோகம் செய்யும் முறை தனியார் வசம் உள்ளது. அதனை மாற்றி ஆவின் நிர்வாகமே பால் விநியோகம் செய்ய வேண்டும் ஓய்வூதிய பணப்பலனை தாமதம் இல்லாமல் ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.