தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் வரும் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பருவ மழை மேலும் தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக ஒடிசாவின் சில பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 6 முதல் 10 வரை ஒடிசாவில் பரவலாக மழை இருக்கும் என்றும் வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றின் தீவிரம் 45 – 55 கிமீ வேகத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்பது பின்னரே தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.