• Fri. Dec 13th, 2024

சேலத்திலிருந்து மீண்டும் விமான சேவை

ByA.Tamilselvan

Aug 5, 2022

சேலம் விமானநிலையத்திலிருந்து மீண்டும் விமான சேவை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31முதல் சேலம் விமானநிலைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யசிந்தியா அறிவித்துள்ளார். சேலம் விமான நிலைய சேவை ஏலம் விடப்பட்டுள்ளது என்றும் அதன் அடிப்படையில் விமான சேவை தொடங்குவது விரைவில் உறுதிசெய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.