• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

குடை போன்ற தோற்றத்தில் பெரிய பாறை..,

ByK Kaliraj

May 1, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக கோவில்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் சிப்பிப்பாறை கிராமம் உள்ளது .இங்கு கொடப்பாறை என்ற கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக குடை போன்ற தோற்றத்தில் பெரிய பாறை உள்ளது.

இது மகாபலிபுரத்தில் உள்ள வானிறை கல் என அழைக்கப்படும் பெரிய பாறை போன்ற அதிசய தக்க வகையில் உள்ளது .ஏனெனில் மிகவும் குறுகலான அடிப்பகுதியில தாங்கி நிற்கும் பாறை போன்று இங்கும் அமைந்துள்ளது. புவியியல் அதிசயமான வானிறை கல் எனவும் குடை போன்ற தோற்றத்தில் இருப்பதால் குடைகல் எனவும் மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை எனவும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் இதனை அழைத்து வருகின்றனர்.

பெரிய குண்றின் மீது இந்த பாறை பின்புறம் தடிமனாகவும் முன்புறம் ஒரு பக்கம் சாய்ந்து நிலையிலும் உள்ளது தனித்துவமான அம்சங்களால் சமநிலையில் பல நூறு ஆண்டுகளாக மழை, புயல் மற்றும் சூறாவளி காற்றினால் சிறிதுகூட சேதம் இன்றி இருந்து வருகிறது.

அதனை விடுமுறை தினங்களில் ஏராளமானோர் நேரில் பார்வையிட்டு ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இப்பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டுமென இப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.