நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவைக்கு ஓணிகண்டி கெத்தை முள்ளி வழியாக பேருந்தும் தனியார் வாகனங்களும் நாள்தோறும் இயங்கி வருகின்றன. முக்கிய சாலையான மஞ்சூர் கோவை சாலை அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அவ்வப்போது காலநிலை மாற்றம் ஏற்படும் சமயத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு தேடி கெத்தை வன பகுதிக்கு வந்து விடுகிறது. கடந்த ஐந்து நாட்களாக முகமூட்டுள்ளகாட்டு யானைகள் மூன்று குட்டிகளுடன் ஆறு காட்டு யானை சாலைகளில் கிடைக்கக்கூடிய உணவுகளை உட்கொண்டு சாலையிலேயே முகமிட்டுள்ளதால் பேருந்து தனியார் வாகனங்கள் நீண்ட நேரம் காத்துக் கிடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காலை மாலை இரவு கோவை நோக்கி சென்ற பேருந்தும் கோவையில் இருந்து மஞ்சூர் நோக்கி சென்ற பேருந்துகளையும் வழிமறித்து விடுகின்றன. பேருந்துகள் தாமதமாகவே வருகின்றன பயணிகளும் அச்சத்தோடு பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் வனத்துறை தக்க நடவடிக்கை எடுத்து சாலையில் முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.