• Tue. Mar 28th, 2023

ஆதம்பாக்கத்தில் உதயநிதி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!

Byவிஷா

Jul 1, 2022

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மாலை ஆதம்பாக்கத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 1,500 பேருக்கு அவர் பொற்கிழி வழங்குகிறார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரான குறு-சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நாளை மாலை 6 மணியளவில் ஆதம்பாக்கம் கே.ஆர்.ஜெ.கார்டனில் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மாலை ஆதம்பாக்கத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 1,500 பேருக்கு அவர் பொற்கிழி வழங்குகிறார். இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரான குறு-சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நாளை மாலை 6 மணியளவில் ஆதம்பாக்கம் கே.ஆர்.ஜெ.கார்டனில் நடைபெற உள்ளது.  இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, 1500 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறார். தி.மு.க. இளைஞரணி செயலாளர் இளைஞர்களின் இதயம் கவர்ந்த இளந்தலைவர் பங்கேற்க உள்ள இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஒட்டுமொத்த கழகத்தினரும் அலைகடலென அணி திரண்டு வரவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *