• Mon. Mar 24th, 2025

ஏ என்று ஆவேசமான வேல்முருகன்!கடுப்பான செய்தியாளர்கள்….

ByPrabhu Sekar

Feb 21, 2025

சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர் சந்திப்பில் டென்ஷனான அமைச்சர் எல்.முருகன் செய்தியாளரை பார்த்து ஏய் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது …

“புதிய தேசியக் கல்விக் கொள்கை பல கல்வியாளர்களின் ஆராய்ச்சியாளர்களின் கருத்தை கேட்ட பிறகு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கையில் ஆரம்பக்கல்வி தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் மக்களை ஏமாற்றுகிற செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். மொழி அரசியலை புகுத்தி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அரசியல் செய்து வருகின்றனர்.

இந்தி மொழி எங்கும் திணிக்கப்படவில்லை. மூன்றாவது மொழியாக விருப்ப மொழியாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து 5 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை வராமல் இருப்பதற்கு முழு காரணம் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்தான். மூன்றாவது மொழியை அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களும் பட்டியல் இன மாணவர்களும் படிக்கவிடாமல் தடுப்பது நவீன தீண்டாமை. புதிய தேசியக் கல்விக் கொள்கை சர்வதேச அளவுக்கு தயார்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச அளவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் பின்னோக்கி இழுக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டு மாணவர்களும், பெற்றோர்களும் வரவேற்று வருகின்றனர். திமுகவினர் கல்வியில் அரசியல் செய்யக் கூடாது” என தெரிவித்தார்.

செய்தியாளர் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும்போது ஏ என ஆக்ரோஷமாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார்.