

சென்னை ஓ.எம்.ஆர்.சாலை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகே சாலையில் சிக்கிய கலவை கலக்கும் லாரியால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை ஓ.எம்.ஆர்.சாலை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகே கலவை கலக்கும் லாரி கந்தன்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்த போது சம்பவ இடத்தில் சாலையில் பாரம் தாங்காமல் முன் சக்கரம் புதைந்து கொண்டது. இதனால் ஓ.எம்.ஆர்.சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக பீக் ஹவர்சில் ஓ.எம்.ஆர்.சாலையில் கடுமையான நெரிசல் ஏற்படும் நிலையில் லாரி சாலையில் தீடீரென சிக்கியதால் வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து செல்கின்றது.

மெட்ரோ பணிக்கு பயன்படுத்தபடும் கிரேன் மூலம் லாரி அரை மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இருப்பினும் லாரி சிக்கிய பகுதியில் ஏற்பட்ட பள்ளம் 10 அடி நீள பள்ளத்தால் சாலை குறுகி வாகன நெரிசல் குறையவில்லை. சாலைப் பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மெட்ரோ ரயில் ஊழியர்கள் போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.
போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

