

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு உதவிபெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்ககூடிய விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளி உதவி தலைமையாசிரியர் பொன்ரமேஷ் வரவேற்று பேசினார். இதில் பள்ளி தலைமையாசிரியர் பரமசிவம் முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற உசிலம்பட்டி அதிமுக (ஓபிஎஸ் அணி) எம்எல்ஏ அய்யப்பன், 203 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இதில் அதிமுக அமைப்புசாரா மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் பிரபு, அம்மாபேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகைச்சாமி, ஆவின் சௌந்திரபாண்டி, நகர நிர்வாகி அழகுமாரி, ராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் பால்ராஜ் நன்றி கூறினார்.

