• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே நெடுஞ்சாலை ஓரங்களில் 400 மரக்கன்றுகளை சமூக ஆர்வலர்கள் நட்டு வைத்தனர்.

ByP.Thangapandi

Feb 2, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி என்ற கிராமத்திலிருந்து வாலாந்தூர் என்ற கிராமம் வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மதுரை – தேனி தேசிய நேடுஞ்சாலை இரு புறங்களில் உள்ள ஓரங்களில் சமூக ஆர்வலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து சுமார் 400 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதில் சாலைகளில் மரங்கன்றுகளை நட்டுவைத்து பாராமரித்து பசுமையாக வைக்கவேண்டும் என சமூக ஆர்வலர் தமிழரசன், 58 கால்வாய் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், குப்பணம்பட்டி அலெக்ஸ், பிரபு மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவர்கள் இணைந்தனர்.

இதில் மருதம், பூவரசு, புங்கை உள்ளிட்ட பல்வேறு வகை பாரம்பரிய மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.