• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

24 மணி நேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு

ByA.Tamilselvan

Nov 4, 2022

திண்டுக்கல் அருகே 24 மணி நேரமும் பால்கறக்கும் தெய்வீக பசுவின் காலில் விழுந்து பொதுமக்கள் ஆசீர் வாதம் பெற்றவருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(50). இவரது மனைவி மயில்(46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பெருமாள் விவசாயம் பார்த்து வருவதோடு கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். சிறுவயது முதல் ஒரு கன்றுகுட்டிைய வாங்கி வளர்த்து வந்த அவர் தற்போது தெய்வீக தன்மையுடன் காணப்படுவதை அறிந்தார். கடந்த பல மாதங்களாக எவ்வித கன்றும் ஈன்றாமல் சினை ஊசி போடாமலும் 24 மணிநேரமும் அந்த பசு பால் தந்தவண்ணம் உள்ளது. எந்தநேரம் கறந்தாலும் பால் வருவதால் அப்பகுதி மக்களும் அந்த பசுவை ஆச்சரியத்துடன் வணங்கி வருகின்றனர். மேலும் தங்கள் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அந்த பசுவுக்கு புல்கட்டு, கீரை மற்றும் தீவனங்களை கொடுத்து அதன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வருகின்றனர்.