

மயிலாடுதுறையில் மூன்றாவது நாள் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில், பல்வேறு பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூருநாதர் ஆலயத்தில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19 ஆம் ஆண்டு மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக,பல்வேறு நாட்டிய நாடகங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.மயிலாடுதுறை ஷண்முகா நாட்டியப்பள்ளி பரதநாட்டிய நிகழ்ச்சி,சென்னை ஸ்ருதிலயா கேந்திரா நடராஜாலயா பரதநாட்டியம், கோவை அப்யாசா அகாடமி ஆஃப் க்ளாசிக்கல் டான்ஸ் நிகழ்ச்சி, சென்னை ஸ்ருதி ராம்மோகன், பரதநாட்டியம் நிகழ்ச்சி,
சென்னை அமிர்தம் ஸ்கூல் ஆஃப் டான்ஸ் பரதநாட்டிய நிகழ்ச்சி பெங்களூர் மனோஜ்னா நிருத்ய கலா அகாடமி பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
200க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். ஏராளமான பார்வையாளர்கள் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் வந்து கண்டு ரசித்தனர்.

