


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மேடை நடனக் கலைஞர்களின் ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டை ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் உசேன், மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் விஜய், மாவட்டத் துணைத் தலைவர் கண்ணன், ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் மாநிலத் தலைவர் சீனிவாசன், மாநில துணைச் செயலாளர் மூத்த கலைஞர் டிங் டாங் வெள்ளைச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்த ஆலோசனை கூட்டத்தை சிறப்பித்தனர்.


இந்த கூட்டத்தில் வருகின்ற திருவிழா காலங்களில் ஆபாசங்கள் இல்லாமலும் பொதுமக்கள் முகம் சுழிக்காத வகையிலும் நமது நடனங்கள் அமைத்து கொள்ள வேண்டும் எனவும், சங்கத்தின் வளர்ச்சி, கலைஞர்களின் நலன், ஆகிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் நலிவடைந்த மேடை நடனக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, வத்தலகுண்டு, கொடைரோடு, சிலுக்குவார்பட்டி, ஒட்டன்சத்திரம், செம்பட்டி, ஆகிய பகுதிகளில் இருந்து பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மூத்த கலைஞர் டிங் டாங் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது..

