உசிலம்பட்டி அருகே கார் டயர் வெடித்து இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில், கூலித் தொழிலாளிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காமராஜ் நகரைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கிய சாமி, ஜேசுதாஸ் உறவினர்களான இருவரும் தறி ஓட்டும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.

இன்று ஆண்டிபட்டிக்கு சென்றுவிட்டு மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்த போது மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்ற கார் உசிலம்பட்டி அருகே நோட்டம்பட்டி பகுதியில் கார் டயர் வெடித்து எதிரே இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆரோக்கிய சாமி, ஜேசுதாஸ் என்ற இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.