• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கொலையாளி சதீசுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு

ByA.Tamilselvan

Oct 16, 2022

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளி சதீசுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாணவி சத்யாவை கொடூரமாக கொலை செய்த கொலையாளி சதீஷ், புழல் சிறையில் அடைக்கப்ட்டுள்ளான். அங்கு சக கைதிகளால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்று சிறைத்துறை அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். சதீஷ் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ஏற்கனவே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதனை கருத்தில்கொண்டே புழல் சிறையில் சதீசுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 8 மணி நேரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் போலீசார் மாறி மாறி பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். சிறையில் சதீஷ் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தொடர்ந்து சதீசை 24 மணி நேரமும் சிறை காவலர்கள் தொடர்ந்து கண்காணித்தப்படியே உள்ளனர்.