• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முப்படைகளின் தலைமை தளபதி: அனில் சௌஹான் நியமனம்…

Byகாயத்ரி

Sep 29, 2022

இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை மத்திய அரசு நியமித்துள்ளது.

அவர் இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலான பணியில், லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான் (ஓய்வு) பல முக்கிய பணிகளை திறம்பட கையாண்டுள்ளார். ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் விரிவான அனுபவம் பெற்றவர். கடந்த ஆண்டு நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து காலியாக இருந்த இப்பதவிக்கு ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.