• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: ஜெயக்குமார் விளக்கம்..

ByA.Tamilselvan

Sep 26, 2022

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் எப்போது என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செனனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பெண் இனத்தையே அவமானப்படுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி. இதற்கான தாக்கம் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும். சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் அரசைக் கண்டு பயமில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு திராணி இல்லை. திமுக அமைச்சர்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. ஜமீன்தார், குறுநில மன்னர்கள் போல் அவர்கள் செயல்படுகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். அது குறித்து தகவல் தெரிவிக்கப்படும். கட்சிப் பணிகள் தொய்வு இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.