• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

ByA.Tamilselvan

Sep 25, 2022

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம், கொந்தளிப்பு, உள்வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, நீர்மட்டம் உயர்வது என பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு கன்னியாகுமரியில் கடல் “திடீர்” என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதை பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர்.