தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சன் டிவிக்கு இணையான போட்டியாக நீண்ட பயணத்தைக் கொண்டது ராஜ் தொலைக்காட்சி. க்ளாசிக் காலங்களை நினைவு படுத்தும் ஒரு சேனல் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது ராஜ் டிவி தான். பல முக்கியமான தமிழ் கிளாசிக் படங்களை வாங்கி ஒளிபரப்பி பிரபலமானது. அதிலும் இந்தியன் படத்தின் ஒளிபரப்பின் போது சுமார் 4 மணிநேரத்துக்கும் மேல் விளம்பரங்களை திரையிட்டது அப்போது பரபரப்பாக பேசப்படட்டது.

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் மற்ற தொலைக்காட்சிகளோடு இந்த காலகட்டத்திற்கு ஏற்ப போட்டி போட முடியாமல் பின்னடைவை சந்தித்தது. இருந்தாலும் ராஜ் டிவி அதன் கிளை ராஜ் டிஜிட்டல், ராஜ் மியூசிக் என பல கிளை சேனல்களையும் வைத்துள்ளது. இந்நிலையில் இப்போது இந்த தொலைக்காட்சி நிறுவனம் ஓடிடியில் கால் பதித்துள்ளது. நேற்று இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. சுமார் 1000 படங்களுக்கு மேல் கொண்டுள்ள இந்த ஓடிடி தளத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் எனும் விதத்தில் வாடிக்கையாளர் கட்டணம் விதிக்கப்படுகிறது. ராஜ் டிஜிட்டல் எனும் பெயரில் இந்த ஓடிடி செயல்பட இருக்கிறது. இனி ஓடிடி தளத்தில் ராஜ் நிறுவனமும் இணைந்துவிட்டது.
