• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து

ByA.Tamilselvan

Sep 14, 2022

மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த நிலையில் என்ஜின் பழுது காரணமாக திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.மேலும் அவர்களுக்கான மாற்று விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் எஞ்சினில் இருந்து வந்த தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் தீ விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மஸ்கட் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.