• Tue. Nov 10th, 2026

தள்ளு வண்டிகளில் சோளக்கதிர்கள் விற்பனை செய்பவர்கள் மீது சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்..,

Byமுகமதி

Nov 10, 2026

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தள்ளு வண்டிகளில் சோளக்கதிர்கள் அவித்து விற்கப்படுகின்றன. இது உணவுக்கு சற்றும் பாதுகாப்பு இல்லாமல் விற்பனை செய்து வருகிறார்கள். பேருந்து நிலையத்துக்குள் ஏராளமான பேருந்துகளும் சில வாகனங்களும் வந்து செல்கின்றன.

சாதாரணமாகவே பேருந்துகளில் கிளம்பும் தூசி நாம் அணிந்திருக்கும் உடைகளையே நாசப்படுத்தி விடுகின்றன. இந்த நிலையில் அவித்த சோளக்கதிர்கள் எந்தவித பாதுகாப்பும் இன்றி திறந்த நிலையில் அப்படியே விற்கப்படுகின்றன.

இதை வாங்கி உண்பவர்களுக்கு மறைமுகமாக பல்வேறு நோய்கள் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தாலும் பயணிகள் அதை கண்டு கொள்வதில்லை. பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை விற்பனையாளர்களும் கண்டு கொள்வதில்லை. இதை கண்டு கொள்ள வேண்டிய அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறை தான். அதற்கு மாவட்ட அளவில் இருக்கும் உயர் அதிகாரி ஒரு மருத்துவராகத்தான் இருக்கிறார்.

அவருக்கு கீழ் பணி புரியும் அலுவலர்கள் களப்பணிக்கு வருவதில்லை. களப்பணிக்கு வரவேண்டிய அலுவலர்கள் இதுபோன்ற செயல்களை கண்டு கொள்வதில்லை. எனவே இதுபோன்ற விற்பனையாகும் பொருட்களை தடை செய்வதோடு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.