• Tue. Nov 10th, 2026

தீபாவளி வெடி விபத்து; கண் பார்வையிழப்பு குறித்து விழிப்புணர்வு..,

ByKalamegam Viswanathan

Nov 10, 2026

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் பட்டாசால் ஏற்படும் வெடி விபத்தில் பாதிக்கப்படும் கண் பார்வை குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும் மீண்டும் தொடரும் விபத்துகள்.

2026 ஆண்டு எல்லா அரவிந்த் கண் மருத்துவமனைகளிலும் 1464-க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடி விபத்தில், கண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் மட்டும் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளும் பாதிக்கப்பட்டு இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த முறையில் கண் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது

எனவே குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் முன்னிலையில் அதிக கவனத்துடன் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடி, பார்வையிழப்பை காக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

இனி வரும் காலங்களில், பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி கண்களை பாதுகாப்போம் என உறுதி கொள்வோம்.