விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பாறைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன முத்தையா விவசாயி இவரது மகன் முத்துக்குமார் (வயது 15) ஆலங்குளம் அருகே உள்ள கல்லம நாயக்கர் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால் தாயார் கிருஷ்ணம்மாள் மகன் முத்துக்குமாரை கண்டித்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் முத்துக்குமார் வீட்டில் காணாமல் போனது தெரியவந்தது. உடனடியாக உறவினர்கள் வீடு மற்றும் முத்து குமாருடன் படிக்கும் நண்பர்கள் வீடுகளில் தேடிய நிலையில் காணாமல் போனது குறித்து ஆலங்குளம் போலீசில் சின்ன முத்தையா புகார் செய்திருந்தார். இந்த நிலையில் எட்டக்காபட்டி பகுதியில் விவசாய வேலைக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் அய்யல் ராஜ் என்பவர் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கில் சிறுவன் இறந்த நிலையில் தொங்கி கொண்டிருப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கமல், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் நேரில் சென்று பார்த்தபோது காணாமல் போன முத்துக்குமார் என தெரியவந்தது. உடனடியாக அவர் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன பள்ளி மாணவன் தற்கொலை செய்தது பாறைபட்டியில் சோகத்தை ஏற்படுத்தியது.
