விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ் பார்மரில் இருந்து விஜய கரிசல்குளம், கோமாளிபட்டி, கணஞ்சாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து அபாய நிலையில் இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த டிரான்ஸ்பார்மரை அப்புறப்படுத்தி விட்டு புதிய டிரான்ஸ்பார்மர் உடனடியாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
