• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

4 மொழிகளில் வெளியாகும் மாநாடு டிரைலர்!..

Byமதி

Oct 1, 2021

சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் படம் மாநாடு. இவர்கள் இருவரும் முதன் முறை இணைவதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மாநாடு, திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக மாநாடு படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை மதியம் 11.25 மணிக்கு வெளியிடப்படுமென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மாநாடு திரைப்படத்தின் தமிழ் டிரெய்லரை இயக்குநர் ஏ.ஆர் முருகதாசும், மலையாளம் டிரெய்லரை நடிகர் நிவின் பாலியும் வெளியிடுகின்றனர். தெலுங்கில் நடிகர் நானியும் கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர். ஒரே நேரத்தில் 4 மொழிகளிலும் படம் வெளியாவதை தொடர்ந்து படக்குழு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.