• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

விஜயுடன் கை கோர்க்கும் நானி!..

Byமதி

Oct 1, 2021

நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தை தோழா படத்தை இயக்கி வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நான் ஈ படத்தில் நடித்த நானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு s.s. தமன் இசையமைக்க வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.