• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அலுகவலகத்திற்கு வந்தால் பிராண்டட் லஞ்ச் பாக்ஸ்.. நியூயார்க் டைம்ஸ் சலுகை!!

Byகாயத்ரி

Sep 14, 2022

நியூயார்க் டைம்ஸ் தனது பணியாளர்களுக்கு ஒரு சலுகை அறிவித்துள்ளது. அலுவலகத்திற்கு திரும்பும் ஊழியர்களுக்கு பிராண்டட் லஞ்ச் பெட்டிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகு பெரும்பாலானவர்களுக்கு அலுவலகம் சென்று பணி செய்வது என்பது அனைவருக்கும் சங்கடமான மாற்றமாக உள்ளது. நியூயார்க் டைம்ஸ் தனது ஊழியர்களிடமிருந்து எதிர்ப்பை மேற்கொண்ட பிறகு இந்த சலுகையை வழங்கியுள்ளது. அதற்கு பதிலாக நாங்கள் மரியாதை மற்றும் நியாயமான ஒப்பந்தத்தை விரும்புகிறோம் என்று ஒரு ஊழியர் ட்வீட்டில் எழுதினார். எங்களுக்கு தேவைப்படுவது ஒப்பந்தம் தான் என்று எங்களில் 330 பேர் மின்னஞ்சல்களில் எழுதி உள்ளனர். பணவீக்கத்தை எதிர்த்துப் போராட உண்மையான உயர்வைக் கேட்பதாக நியூயார்க் டைம்ஸ் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.