• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கடமலைக்குண்டு அருகே மாபெரும் கபடி போட்டி

தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரம் கிராமத்தில் பாலா முதலாம் ஆண்டு நினைவு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், கம்பம் , கோட்டூர், மேலப்பட்டி, பாலூத்து, மதுரை, விருதுநகர், முத்தாலம்பாறை, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலா நினைவு கபடிகுழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.