• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..

ByA.Tamilselvan

Sep 13, 2022

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
. டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெற்றுள்ளனர்.
டி20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பெயர் பின்வருமாறு: ரோகித் ஷர்மா (சி), கேஎல் ராகுல் (விசி), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.