• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ராஜமெளலியுடன் மோதும் பிரபாஸ்

Byமதி

Sep 30, 2021

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’. முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்தில், பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

70-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான, அறிவிப்பு சமீபத்தில் வெளியானாலும், மீண்டும் ஜனவரி 14 ‘ராதே ஷ்யாம்’திட்டமிட்டப்படி வெளியாகும் என்று மீண்டும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 12 ஆம் தேதி ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

உலகம் முழுக்க வசூல் சாதனை செய்த ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்களை பிரபாஸ் நடிப்பில் ராஜமெளலி இயக்கியிருந்தார். இந்த நிலையில், ராஜமெளலி படத்துடன் பிரபாஸ் படமும் அடுத்தது திரைக்கு வருவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.