• Fri. Mar 29th, 2024

தொடரும் எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர இங்கிலாந்து அரசின் அதிரடி முடிவு

Byமதி

Sep 30, 2021

பிரெக்சிட் ஒப்பந்தம் காரணமாக, இங்கிலாந்தில் லாரி ஓட்டுநர்களுக்கு மிகப் பெரிய தட்டுப்பாடு உருவாகியுள்ளளது. இதன் காரணமாக, எரிபொருட்களை பங்க்குகளுக்கு கொண்டு சேர்ப்பதில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. பல பெட்ரோல் பங்க்குகளில் கடந்த சில நாட்களாக எரிபொருள் இல்லாத காரணத்தினால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக இங்கிலாந்தின் நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஒரு சில லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிக் கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

மேலும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து செய்திகள் பரவத் தொடங்கியவுடன், மக்கள் தேவைக்கு அதிகமாக அதை வாங்கி குவித்துள்ளனர். இதுவும் கூடுதல் நெருக்கடியை ஏற்ப்படுத்தி உள்ளது.

இந்த எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனையைப் போக்குவதற்காக இங்கிலாந்து, ராணுவ தரப்பை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ராணுவத்தில் பீரங்கி டாங்கிகளை இயக்கும் 150 ஓட்டுநர்கள் எரிபொருட்களை, பெட்ரோல் பங்க்குகளில் கொண்டு சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *