• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாகிஸ்தானுக்கு ரூ. 239 கோடி நிதி உதவி -அமெரிக்கா அறிவிப்பு!!!

ByA.Tamilselvan

Sep 1, 2022

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி அறிவிப்பு.பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பாகிஸ்தானில் இதுவரை பெண்கள், குழந்தைகள் என 1100-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் மழையால் பலர் பலியான சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்து உள்ளது.
வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சோகத்தை பாகிஸ்தான் மக்களுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கூடுதலாக ரூ.239 கோடி நிதி உதவி வழங்குகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா எப்போதும் உதவியாக இருக்கும். இவ்வாறு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.