• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

7 வயது சிறுமி பலாத்காரம்-தாயின் 2-வது கணவன் கைது

ByA.Tamilselvan

Aug 31, 2022

7வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தாயின் 2 வது கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 33 வயது பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக மகேஷ்குமார் (33) என்பவருடன் வாழ்ந்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த 7 வயதான பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் அந்தப் பெண் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமியிடம் மகேஷ்குமார் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டு அழுது கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த அந்தப் பெண், தனது மகளை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார்.
மருத்துவ பரிசோதனையில், சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், இதுகுறித்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.